பிரதான செய்திகள்

சாமர சம்பத் பதுளை நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பதுளை நீதவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை (07) காலை  ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

சாமர சம்பத் தசநாயக்க 2016 ஆம் ஆண்டில் ஊவா மாகாண முதலமைச்சராக கடமையாற்றிய போது பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்குவதற்காக மாகாண சபை ஊடாக வங்கியிலிருந்து 10 இலட்சம் ரூபாவை காசோலையாக பெற்று அதனை பணமாக மாற்றி தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தியமை உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மன்னாரில் மண் அகழ்வு தனியாருக்கு தடை! ரிஷாட்,மஸ்தான் அதிரடி நடவடிக்கை

wpengine

சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பிரச்சாரம்

wpengine

தமிழ்,முஸ்லிம் உறவுகளை சீர்குலைக்கும் செயற்பாடுகளை யாரும் முன்னேடுக்க வேண்டாம் மன்னாரில் அமைச்சர் றிஷாட்

wpengine