பிரதான செய்திகள்

சாணக்கியனின் நிதி ஒதுக்கீட்டில் மகளிர் இல்லத்திற்கு  தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனினால் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட அரசடித்தீவு சக்தி மகளிர் இல்லத்திற்கு  தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 2021ஆம் ஆண்டுக்கான வருடாந்த பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து இவை வழங்கி வைக்கப்பட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் உத்தியோகபூர்வ செயலாளரும், 

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் முகாமையாளருமான மதிமேனனினால் இவை வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் இலங்கை தமிழரசு கட்சி கிளையின் பட்டிரிப்புத் தொகுதியின் தலைவர் பா. அரியநேந்திரன், பட்டிருப்பு தொகுதியின் பொருளாளர் நடராஜா, பட்டிப்பளை தமிழரசுக்கட்சி கிளையின் தலைவர் நேசதுரை மற்றும் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் புஸ்பலிங்கம் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

Related posts

சமூர்த்தி உத்தியோகத்தர் மீதான தாக்குதல்! சக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில்

wpengine

மன்னார் நகர பிரதேச செயலகத்தில் சமுர்த்தி போட்டி (படம்)

wpengine

உலகின் வயதான பெண்மணியின் நீண்ட ஆயுள்! பன்றி, கோழி சாப்பிட மாட்டேன்

wpengine