உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

சவூதியின் தலைநகர் மீது திடீர் ஏவுகணை தாக்குதல்

சவூதியின் தலைநகரான றியாதிலுள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையம் மீது திடீரென ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

 

குறித்த ஏவுகணைத் தாக்குதலானது யேமனில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திடீரென மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் காரணமாக அங்கு பெரும் பதற்றநிலை காணப்பட்ட போதிலும் எவ்வித உயிர்ச்சேதங்களே அல்லது பொருட்சேதங்களோ ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

சவூதி அரசாங்கம் அண்மைக்காலமாக யேமெனில் உள்ள போராட்டக் குழுக்களுக்கு எதிராக  கடுமையான ஆகாய வழி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் சவூதியின் தலைநகர் றியாத்தில் நேற்றிரவு ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த ஏவுகணைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் யேமனின் பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கையில்,

சவூதியின் தலைநகரை அசைத்துள்ள ஏவுகணைத் தாக்குதலானது வெற்றிகரமாக அமைந்துள்ளது. தாக்குதலுக்குப் பயன்படுத்திய ஏவுகணையானது யேமன் தயாரிப்பு ரொக்கெட் எனவும் நீண்ட தூரம் தாக்கும் “புர்ஹன் 2 எச்” வகையான ஏவுணையெனவும் தெரிவித்துள்ளது.

Related posts

24 ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம்

wpengine

கிண்ணியா துறையடியில் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற சட்ட விரோத கட்டடிடத்தை நிறுத்தும்படி அரசாங்க அதிபர் உத்தரவு

wpengine

மஹிந்த கூட்டணிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

wpengine