பிரதான செய்திகள்

சவூதி மொஹமட் பின் சவூத் பல்கலைக்கழகத்துக்கும் பெடிகளோ கெம்பஸுக்கும் இடையில் கலந்துரையாடல்

சவூதி அரேபியாவின் ரியாத் இமாம் மொஹம்மட் பின் சவூத் பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் டொக்டர். அலி அல்கர்னி மற்றும் ‘பெடிகளோ கெம்பஸ்’ தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று திங்கட்கிழமை (10) இடம்பெற்றது.

அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பெடிகளோ கெம்பஸ் விரிவுரையாளர் மௌலவி பாறூக் (அஸ்ஹரி) கலந்து கொண்டார்.

இதன்போது, மொஹமட் பின் சவூத் பல்கலைக்கழகத்துக்கும் மட்டக்களப்பு கெம்பஸுக்கும் இடையில் ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய பல்வேறுபட்ட பயிற்சி நெரிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வரும் நிலையில், எதிர்காலத்தில் சவூத் பல்கலைக்கழகத்தின் கிளையொன்றை இலங்கையில் அமைப்பது தொடர்பாகவும் மேலும் பல பாடநெரிகளை ஆரம்பிப்பது சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.

Related posts

நீர் வழங்கல் அமைச்சர் செய்யவில்லை! பொலிஸார் செய்தார்

wpengine

2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சாய்னா! மோடி, சச்சின் வாழ்த்து

wpengine

தனிமையில் இருந்த குறித்த யுவதி தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்

wpengine