பிரதான செய்திகள்

சவூதி அரேபியா இளவரசர் அல் சவூத் இலங்கை விஜயம்

சவூதி அரேபியாவின் முன்னணி முதலீட்டாளரும் இளவரசருமான பஹத் பின்முக்ரீன் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட முக்கிய அமைச்சர்களை, சவூதி அரேபியா இளவரசர் அல் சவூத் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மேற்கொண்டுள்ளார்.

இலங்கையில் முதலீடுகளையும், வர்த்தக நடவடிக்கைகளையும் மேற்கொள்வது தொடர்பாக ஆராய்வதற்காக விஜயம் செய்யும் இளவரசர் அல் சவூத், கிழக்கு மாகாணத்திற்கும் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

தேசிய மாநாடு இடம்பெறும் பாலமுனை களத்தில் ஹக்கீம்

wpengine

2ஆம் கட்ட 5000 கொடுப்பனவு 11ஆம் திகதி பசில் ராஜபஷ்ச

wpengine

நன்றிகெட்ட நாயகனின் நாடகம்! அஷ்ரப் நினைவு நாள் சோகம்

wpengine