உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

சவுதியில் பாகிஸ்தானிய திருநங்கைகள் இருவர் பொலிஸாரால் அடித்துக் கொலை!

பாகிஸ்தானைச் சேர்ந்த திருநங்கைகள் இருவர், சவுதி அரேபிய சிறைச்சாலையில் பொலிஸார் கண்முன்னே சாக்கில் கட்டிவைத்து தடிகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பெண்களின் ஆடைகளை ஆண்கள் அணிந்துகொள்வது சவுதி அரேபியாவில் சட்டப்படி குற்றமாகும். இந்த நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த திருநங்கைகள் சிலர், சவுதி அரேபிய தலைநகரான ரியாதுக்குச் சென்றுள்ளனர். அங்கே பொது இடங்களில் பெண்களின் உடைகளை அணிந்தபடி இவர்கள் வலம் வந்துள்ளனர்.

இதுபற்றிக் கிடைத்த தகவலின் பேரில் பொலிஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் 33 திருநங்கைகள் கைதாகினர். இவர்களை சிறைச்சாலைக்குக் கொண்டு சென்ற பொலிஸார், அவர்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

குறிப்பாக, அம்னா (35) மற்றும் மீனோ (26) என்ற இரண்டு திருநங்கைகளையும் சாக்கில் கட்டிவைத்து, சிறைக் கைதிகள் சிலரைக் கொண்டு தடிகளால் அடிக்கச் செய்துள்ளனர். கடுமையான தாக்குதலுக்கு இலக்கான இருவரும் சிறைச்சாலையிலேயே கொல்லப்பட்டனர்.

இது குறித்து திருநங்கைகளுக்கு ஆதரவான அமைப்புகள் தமது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன. கைதான திருநங்கைகளுள் 11 பேர் மட்டுமே சுமார் ஒன்றரை இலட்சம் ரியால்கள் பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும், சிறையில் உள்ள ஏனைய திருநங்கைகளின் கதி என்ன ஆகுமோ என்று கேள்வியும் எழுப்பியுள்ளன இவ்வமைப்புகள்!

Related posts

ஊடகவியலாளர்கள் எவரும் இங்கு வரவில்லை ரணில் கவலை

wpengine

மின் வெட்டும் பயங்கரவாத செயல்களும்

wpengine

பாக்கிஸ்தானின் 76 வது தேசிய தினம் இன்று!

wpengine