செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

சர்ச்சைக்குரிய பெண் சாமியார் அன்னபூரணி யாழ் வருகை : வெளியாகிய எதிர்ப்பு!!!!

தன்னை ஆதிபாராசக்தியின் வடிவம் என கூறிகொண்டிருக்கும் இந்தியாவின் சர்ச்சைக்குரிய பெண் சாமியாரான அன்னபூரணி அடுத்த மாதம் யாழ்ப்பாணம் வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதற்காக அனைவருக்கும் அழைப்பு விடுக்கும் வகையிலான பதிவொன்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அவரின் வருகைக்கு யாழில் எதிர்ப்புகள் எழுந்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களிலும் எதிர்ப்புகள் வலுத்துள்ளன.

தமிழ் நாட்டின் திருவண்ணாமலையில் ஆச்சிரமம் நடத்தும் அன்னபூரணி தான் ஆதிபாராசக்தியின் வடிவம் என பலருக்கும் ஆசி வழங்கி வருகின்றார்.

தனது தனிப்பட்ட வாழ்வில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள அன்னபூரணி தற்போது யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளமை தொடர்பில் எதிர்ப்புகள் வெளியாகியுள்ளன.

Related posts

மஸ்கெலியா பிரதேச சபையை கைப்பற்றிய சுயேச்சைக் குழு..!

Maash

சிறுபான்மை மக்களுக்கு பதிப்பு! கண்டிப்பாக எதிர்க்க வேண்டும் அமைச்சர் றிஷாட்

wpengine

பிரதியமைச்சர் ஹரிஸினால் நிராகரிக்கப்பட்ட தமிழ்த் தரப்பினரின் கோரிக்கை

wpengine