பிரதான செய்திகள்

சரத் பொன்சேகா சிறையில் இருக்கும் போது சுகபோகம் அனுபவித்தார்! ஏன் நான் பார்வையீட வேண்டும்-மஹிந்த

சரத் பொன்சேகா சிறையில் இருக்கும் போது எதற்காக நான் நேரில் சென்று பார்த்திருக்க  வேண்டும். அவர் சிறைச்சாலையில் இருக்கும் போது அனைத்து சுகபோகங்களையும் அனுபவித்தார். இதேவேளை செய்த குற்றத்துக்காகவே அவர் தண்டனை அனுவிபத்தார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை நேற்று பார்வையிடச் சென்ற போதே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

விமல் வீரவன்ச, சசி வெல்கம ஆகியோர் இன்னும் சிறைச்சாலையில் உள்ளனர். குற்றம் செய்யாமலே இவர்கள் சிறை அனுபவிக்கின்றனர்.

ஆனால் சரத் பொன்சேகா செய்த குற்றத்துக்காக தண்டனை அனுபவித்தார். பொன்சேகா சிறையில் இருக்கும் போது அனைத்து சுகபோகங்களையும் அனுபவித்தார். இதனால் அவரை நேரில் வந்து பார்க்க வேண்டிய தேவை எனக்கு இருக்கவில்லை.

தேர்தலை நடத்துவதற்கு நாங்கள் சுதந்திரக் கட்சியுடன் இணையும் வரை காத்திருக்கின்றார்கள் என கூறுவது நகைச்சுவையான விடயமாகும். நாம் சுதந்திரக் கட்சியுடன் இணைவது கனவு காண்பதற்கு சமம் என்றார்.

Related posts

இவ்வாட்சிக்கு சோரம் போன மு.கா பிரதிநிதிகள்

wpengine

இன்று மஹிந்த,நாளை மைத்திரி புதிய மாற்றம்

wpengine

எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு!

Editor