பிரதான செய்திகள்

சரத் பொன்சேகா ஆளும் உறுப்பினர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கோரிக்கை

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் கவனமாக இருக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம (Kumara Welgama) ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் முறை வாசிப்பின் மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் சரத் பொன்சேகா சிறையில் அடைத்தமைக்கான பலாபலன்களை அதனை செய்த தரப்பினர் எதிர்காலத்தில் அனுபவிக்க நேரிடும்.

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து போட்டியிட்டார் என்ற காரணத்திற்காகவே சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டார். இது முற்றிலும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை.

தனது எதிர்கால அரசியல் பயணத்தில் சரத் பொன்சேகா எந்த இடத்திற்கு சென்று நிற்க போகிறாரோ தெரியவில்லை. அப்படியான இடத்திற்கு வரும் சந்தர்ப்பத்தில் சரத் பொன்சேகாவுக்கு எதிராக அரசியல் பழிவாங்கலை மேற்கொண்ட ஆளும் கட்சியினர் துரத்தி, துரத்தி மேற்கொள்ளும் தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஒட்டமாவடி சுகாதார வைத்திய அலுவலக பரிசோதனை! உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

wpengine

தமிழ்,முஸ்லிம் இனவாதம் பேசிய என வட மாகாண முன்னாள் முதலமைச்சர்

wpengine

ரயில் கடவையில், துவிச்சக்கர வண்டியில் கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் ரயில் மோதி பலி..!!!!

Maash