பிரதான செய்திகள்

சம்மாந்துறையில் சிறிய ஆடை கைத்தொழிற்சாலை அங்குராப்பணம் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட்

(அனா)

யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சிறிய ஆடை கைத்தொழிற்சாலை அங்குராப்பண நிகழ்வு சனிக்கிழமை சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம்பெற்றது.

லக்சல நிறுவனத்தின் தலைவர் இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்; வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் அதிதியாக கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, சம்மாந்துறை பிரதேச செயலக செயலாளர் எஸ்.எம்.ஹனீபா, அட்டாளைச்சேனை பிரதேச செயலாக செயலாளர் எஸ்.ஹனீபா, இறக்காமம் பிரதேச செயலக செயலாளர் எஸ்.நஸீர், நிந்தாவூர் பிரதேச செயலக செயலாளர் திருமதி.றிபா ஜெமீல், அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் எஸ்.ஜெமீல், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் சுபைதீன், கல்முனை நகர சபை முன்னாள் உறுப்பினர் முபீத், கல்முனை தொகுதி அமைப்பாளர்களான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி, கலீல் றகுமான், வெஸ்டர் றியாஸ், இக்பால், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

Related posts

மும்மண்ன பாடசாலை மைதான இழுபறிக்குத் தீர்வு குருனாகல் மாவட்ட இணைப்பாளர் அசார்தீன்

wpengine

பஷிலின் மனு மீதான விசாரணை இன்று ஒத்திவைப்பு

wpengine

மக்கள் அனைவரும் சுதந்திரக் கனவை ஒன்றாகக் காண்போம்; ஜனாதிபதி

Maash