செய்திகள்பிரதான செய்திகள்

சம்மாந்துறை சுகாதார அதிகாரிகளினால் சோதனை- சிக்கிய , உணவகங்கள் மற்றும் இறைச்சி கடை !

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குட்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உள்ள பெண்கள் விடுதி சிற்றுண்டிச்சாலை மற்றும் சம்மாந்துறை பகுதியில் உள்ள உணவு உற்பத்தி நிலையங்கள், இறைச்சிக் கடைகள் என்பன சுகாதார முறையில் காணப்படவில்லை என சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.

குறித்த முறைப்பாடுக்கு அமைய இன்று (19) சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத் தலைமையிலான குழுவினரினால் திடீர் சோதனை நடவடிக்கை இடம் பெற்றது.

இதன்போது, சுகாதார வைத்திய அதிகாரிகளினால் குறித்த சிற்றுண்டிச்சாலை உரிமையாளருக்கு எதிராகவும், 2 உணவகங்களுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் சம்மாந்துறை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது ரூ. 30 ஆயிரம் தண்டப்பணம் அறவிடப்பட்டதுமின்றி எச்சரிக்கையும் செய்யப்பட்டது.

இச்சோதனை நடவடிக்கையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.என்.எம். பைலான் தலைமையிலான குழுவினர் இச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களே !

wpengine

2022 ல் புதிய அரச ஊழியர்கள் இல்லை வாகனம் இறக்குமதி தடை -பசில்

wpengine

தோற்றத்துடன் நபரொருவர் வாகனத்தில் வந்திறங்கியிருந்தார்! மக்கள் எதிர்ப்பு

wpengine