பிரதான செய்திகள்

சம்பிக்க,மனோ,ஹக்கீம் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் உருவாக்கப்படும் புதிய கூட்டணியுடன் கைகோர்க்க போவதாக ஜாதிக ஹெல உறுமய, தமிழ் முற்போக்கு முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தெரிவித்துள்ளன.


இந்த கட்சிகளின் தலைவர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளனர்.


எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட புதிய கூட்டணியை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அண்மையில் அனுமதி வழங்கியது.


உருவாக்கப்படும் கூட்டணியின் தலைமை, கூட்டணியின் பொதுச் செயலாளரை நியமிக்கும் அதிகாரம், பிரதமர் வேட்புமனு மட்டுமல்லாது வேட்புமனு குழுவின் தலைமை, பதவியும் சஜித் பிரேமதாசவுக்கு வழங்க செயற்குழு தீர்மானித்திருந்தது.


இந்த விடயங்கள் தொடர்பாக உன்னிப்பாக கவனம் செலுத்தி, சஜித் பிரேமதாசவின் தலைமையில் உருவாகும் விரிவான கூட்டணியில் தமது கட்சிகளும் இணைந்து மக்களின் எதிர்பார்ப்புகளை உறுதிப்படுத்தும் அரசாங்கம் ஒன்றை உருவாக்க பங்களிப்பு செய்ய போவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

தேர்தல் நிபுணர் வொலன்டை அமைச்சர் ரிஷாட் சந்தித்து பேச்சு சிறுபான்மை மக்களின் நலன் தொடர்பில் எடுத்துரைப்பு

wpengine

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு! நாளை விடுதலை

wpengine

காரியப்பர் சம்மாந்துறை தபால் நிலைய அதிபராக இடமாற்றம்.

wpengine