பிரதான செய்திகள்

சமூர்த்தி நிவாரணம் கோரி மூதூர் கிழக்கு-மேற்கு மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம்

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் வாழ்ந்த காரணத்தால் பல வருடங்களாக சமூர்த்தி நிவாரணம் நிராகரிக்கப்பட்ட மூதூர் கிழக்கு-மேற்கு மக்கள் இன்று கவனயீர்ப்பு அமைதி பேரணியில் ஈடுபட்டனர்.

மூதூர் பிரதேசத்தில் சம்பூர் கிழக்கு-மேற்கு, கட்டபறிச்சான் தெற்கு- வடக்கு, அம்மன்நகர், கனேசபுரம், சாலையூர், சந்தோசபுரம், கடற்கரைச்சேனை, சேனையூர், நவரட்னபுரம், பாட்டாளிபுரம், நல்லுர் ஆகிய கிராமபிரிவு பிரதேசங்களைச்சேர்ந்த சுமார் 4900 பேர்களுக்கு சமூர்த்தி நிவாரணத்தை பெற்றுத்தருமாறு கோரி இன்று காலை 8.00 மணியளவில் சம்பூர் நாவலடிச்சந்தியில் இருந்து பேரணியாக சென்று மூதூர் பிரதேச செயலகத்தை சென்றடைந்தனர்.

அங்கு வைத்து தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை மூதூர் பிரதேச செயலாளர் திரு.யூசுப்பிடம் கையளித்தனர்.

Related posts

மஹிந்த ராஜபக்ச குடும்பத்தை கேலி செய்த ஊர்வலம் (படங்கள்)

wpengine

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் முயற்சியால் ஏறாவூரில் ஆடைத் தொழிற்சாலை

wpengine

வவுணதீவு பிரதேச செயலக வருடாந்த கலாச்சார விழா

wpengine