பிரதான செய்திகள்

சமூர்த்தி உத்தியோகத்தர்கள் வாழ்வாதார கடன் – எஸ்.பி.திசாநாயக்க

வாழ்வின் எழுச்சி சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்பு குறித்து யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

யாழ். மாவட்ட சமூர்த்தி ஆணையாளர் ஆ. மகேஸ்வரன் தலைமையில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த மீளாய்வுக் கூட்டத்திற்கு பிரதம விருந்திரனாக, சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்பு அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க கலந்துகொண்டு, சமூர்த்தி பயனாளிகளுக்கான உதவித்திட்டங்களை வழங்குவது குறித்து கருத்துரைகள் வழங்கினார்.

சமூர்த்தி உத்தியோகத்தர்களின் பங்களிப்புக்களின் மூலம் பயனாளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த முற்படுவதுடன், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் வாழ்வாதார கடன் உதவிகளையும் பெற்றுக்கொள்ள முடியுமென்றார்.

சமூர்த்தி உத்தியோகத்தர்கள் கடன் திட்டங்களைப் பெற்றுக்கொள்வதற்கான சுற்று நிரூபங்கள் மிக விரைவில் வெளிவரவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உட்பட துறைசார்ந்த அதிகாரிகள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

Related posts

நியூஸிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இங்கிலாந்து

wpengine

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி!

Editor

வேட்புமனு கோரல் 27ஆம் திகதி

wpengine