பிரதான செய்திகள்

“சமூக ஒற்றுமைக்கு வழிபேனுவோம்” மீலாத் வாழ்த்துச் செய்தியில் பிரதி அமைச்சர் அமீர் அலி

(வாழைச்சேனை எஸ்.எம்.எம்.முர்ஷித்)

காலத்தின் தேவையை கருத்திற்கொண்டு இலங்கை முஸ்லிம்கள் ஒற்றுமையோடு வாழ்வதற்கு இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தில் நாம் உறுதிபூண வேண்டும் என தனது மீலாத் தின வாழ்த்துச் செய்தியில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி குறிப்பிட்டுள்ளார்.

முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ள பிரதி அமைச்சர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது.

அகிலத்திற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட இறைத்துதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் பிறந்த தினமான இன்றைய தினம் முஸ்லிம்கள் அனைவரும் அவரது வாழ்க்கை வழி முறைகளை தம் வாழ்வில் கடைப்பிடித்து வாழ்பவர்களாகவும் அவரது வழிகாட்டல்களை ஏற்று நடப்பவர்களாகவும் நாம் ஒவ்வொருவரும் இருக்க வெண்டும்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் முஸ்லிம்கள் கட்சி வேருபாடு, பிரதேச வேருபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றினைந்து சமுக நோக்கத்திற்காக செயற்பட வேண்டிய தேவையை ஏற்பட்டுள்ளது அதனால் நம்மில் ஒவ்வொருவருக்கும் உள்ள கருத்து வேருபாடுகளை மறந்து சமுகத்தின் பாதுகாப்பு தொடர்பாகவும் சமுகத்திற்கு எதிராக செயற்படுபவர்களுக்கு இறைவன் நல்ல சிந்தனையை வழங்க வேண்டும் என்றும் இந்த சந்தர்ப்பத்தில் பிராத்தித்து கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

கருக்கலைப்பை பாவமாக கருதுகின்றோம்-போப் பிரான்சிஸ்

wpengine

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும்

wpengine

பிரபாகரனை கண்டுபிடித்தவர்களுக்கு ஞானசார தேரரை கண்டுபிடிக்க முடியவில்லை

wpengine