பிரதான செய்திகள்

சமுர்த்தி வழங்கிய விடயத்தில் அரசியல்வாதிகள் உரிமை கோரமுடியாது.

நல்லாட்சி அரசினால் வழங்கப்படும் சமூர்த்தி திட்டத்துக்காக யாரும் பெற்றுத் தந்ததாக கருதி எதையும் கொடுக்க தேவையில்லை இதனை பிரதேச செயலாளர் என்ற வகையில் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.ஹனி தெரிவித்துள்ளார்.


கிண்ணியா பிரதேச செயலகத்தில் புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கான உரித்து படிவங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் நேற்று கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இந்த சமுர்த்தி கொடுப்பனவு ஊடாக தங்களது பிள்ளைகளின் கல்வி வறுமை ஒழிப்பில் இருந்து வெளியேற வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கான வழியாக அமைகின்றது.

இதன் ஊடாக வறுமை நிலையில் இருந்து மீண்டு பிள்ளைகளுடைய கல்வியின் வளர்ச்சியிலும் உதவக் கூடிய வழி வகைகளை அரசாங்கம் செய்து தந்துள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் எதிர்கால திட்டமும் இதுவே இத் திட்டத்தின் ஊடாக நாட்டில் வறுமையற்ற நிலை காணப்பட வேண்டும்.

இதனை நோக்கிய பயணத்தை அரசாங்கம் எதிர்காலத்திலும் நடைமுறைப்படுத்தவுள்ளது. இதுவே அரசின் எதிர்பார்ப்பாகவும் காணப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

இடம்பெயர்ந்தோரை மீள்குடியேற்றுவது தொடர்பில் வடமாகாண மீள்குடியேற்றச் செயலணி ஆராய்வு

wpengine

மியன்மார் முஸ்லிம்களுக்காக புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

wpengine

பிரித்தானியாவுக்கு விளையாட சென்ற இலங்கை வீரர்கள் ஒட்டம்

wpengine