பிரதான செய்திகள்

சமுர்த்தி வங்கிகளுக்கு புதிய முகாமைத்துவ குழு

சமுர்த்தி வங்கி நடவடிக்கைகளை சரியான முறையில் மேற்கொள்வதற்காக புதிய முகாமைத்துவ குழுவை நியமிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

இந்த முகாமைத்துவ குழுவின் பிரதான அதிகாரியாக பொருளாதார விவகார அமைச்சின் செயலாளர் நியமிக்கப்பட உள்ளார்.

இதன்மூலம் சமுர்த்தி வங்கியை மிக சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்ய முடியும் என மத்திய வங்கி நம்புகிறது.

இதனடிப்படையில் நிதியமைச்சும் இலங்கை மத்திய வங்கியும் இணைந்து நீண்டகால வேலைத்திட்டத்தை செயற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த நிதி ஒதுக்கீடு!

Maash

உத்தரவை மீறி பயணித்த கார் மீது பொலிசார் துப்பாக்கி சூடு!

Editor

கூட்டமைப்பு அதன் கொள்கையில் இருந்து உலகி உள்ளது ஹரீஸ் பா.உ

wpengine