பிரதான செய்திகள்

சமுர்த்தி பயனாளிகளின் விற்பனை நிலையம் திறந்துவைப்பு

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி பயனாளிகளின் உற்பத்தி பொருட்கள் விற்பனை நிலையம் மாவட்ட அரசாங்க அதிபரினால் திறந்து வைக்கப்பட்டது .

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய அபிவிருத்தி ஒன்றியத்தின் நிதி உதவியின் கீழ் இலங்கையில் முதல் முன்னக அலுவலகமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமாரினால் திறந்து வைக்கப்பட்டது .

தேவைகளை நாடிவரும் மக்களுக்கும், அரச அதிகாரிகளுக்கும் இடையேயுள்ள இடைவெளியினை குறைக்கவும் மக்களுக்கான வினைத்திறன் மிக்க சேவையை வழங்கும் நோக்கில் பிரதேச செயலகத்தினால் நடைமுறைப்படுத்துகின்ற வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

இந்நிகழ்வின் போது இரண்டாம் கட்ட திட்ட அபிவிருத்திக்கான முன்மொழிவு ஆவணங்களும் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது .

இதேவேளை மண்முன வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையமும் மாவட்ட அரசாங்க அதிபரினால் திறந்து வைக்கப்பட்டது
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே .குணநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நல்லாட்சி திட்ட அதிகாரி ஆர். தனராஜா, மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக அலுவலக அதிகாரிகள் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பயனாளிகள் என பலர் கலந்துகொண்டனர்.

Related posts

சதொசவில் குறைந்த விலையில் அப்பியாசக் கொப்பிகள்

Editor

அமைச்சர்­களின் விட­ய­தா­னங்­களில் மாற்­றம்

wpengine

இலங்கை உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல் ; பிரதமர் கண்டனம்

wpengine