பிரதான செய்திகள்

சமஷ்டியினை நிறைவேற்றி காட்டுங்கள் பார்ப்போம்! விமல் சவால்

முடிந்தால் அரசாங்கம் சமஷ்டி அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வந்து அதனை நிறைவேற்றிக் காட்டுமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச சவால் விடுத்துள்ளார்.

புறக்கோட்டையில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அரசியல் சாசனப் பேரவையிலிருந்து தாம் உள்ளிட்ட ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் விலகிக் கொண்டுள்ளதால் அந்த சபை செல்லுபடியற்றது எனவும் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பதால் நாங்கள் தானாவே அரசியலமைப்புச் சட்டவாக்க சபையின் உறுப்பினர்கள் ஆனோம்.

எனினும் ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் நடவடிக்கை குழு மற்றும் உபகுழு கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை.

நாடாளுமன்றத்திற்கு வெளியில் அரசியலமைப்புச் சட்டவாக்க சபை என்ற பெயரில் அணியை நியமித்து புதிய அரசியலமைப்புச்சட்ட வரைவை கொண்டு வருவதே ரணில் விக்ரமசிங்கவின் தேவையாக இருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக அது முடியாமல் போனது எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, விமல் வீரவங்ச இவ்வாறு கூறிய போதிலும் பொதுத் தேர்தல் நடக்கும் முன்னரே பிரதமர் ரணில் விக்ரமசிங்க முழு நாடாளுமன்றமும் அரசியலமைப்புச் சட்டவாக்க சபையாக மாற்றப்பட்டு, புதிய அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்படும் என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தோற்றத்துடன் நபரொருவர் வாகனத்தில் வந்திறங்கியிருந்தார்! மக்கள் எதிர்ப்பு

wpengine

மட்டு கடலில் பாம்புகள்! இது சுனாமியின் அடையாளமா?

wpengine

தந்தையை இழந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கிழக்கு ஆளுநர் நீதி ஒதுக்கீடு

wpengine