பிரதான செய்திகள்

சமஷ்டியால் இனவாதம் தலைதூக்கும் என்பது பைத்தியக்காரத்தனம்

சமஷ்டி மூலம் இன­வாதம் தலை­தூக்­கப்­பட்­டுள்­ளது என்­பது பைத்­தி­யக்­கா­ரத்­த­ன­மான கூற்­றாகும். பல வரு­டங்­க­ளாக அர­சி­யல்­வா­திகள் சமஷ்டி என்றால் நாடு பிள­வ­டைந்­து­விடும் என்று                      தொடர்ச்­சி­யாக கூறி வரு­கின்­றனர். இதனால் நீங்­களும் அவ்­வாறு நம்­பு­கி­றீர்கள். அந்த கூற்று               உங்­க­ளுக்கு பழக்­க­மா­கி­விட்­டது. பத்­தி­ரிகை, புத்­த­கங்­களை எடுத்து பாருங்கள். சமஷ்­டி­முறை என்றால் என்­ன­வென்­பது உங்­க­ளுக்கு புரியும் என்று வட­மா­காண முத­ல­மைச்சர்                                           சி.வி.விக்­­னேஸ்­வரன் தெரி­வித்தார்.

இந்­தி­யா­விலும் இந்த சமஷ்டி முறை நடை­மு­றையில் இருக்­கின்­றது. கன­டா­விலும்,                                 சுவிட்­ஸர்­லாந்­திலும் இந்த சமஷ்டி முறைமை நடை­மு­றை­யி­லுள்­ளது. சமஷ்டி முறை­யி­னூ­டாக ஒரு நாளும் நாடு பிரி­வ­டைந்து செல்­லாது என்றும் வடக்கு முத­ல­மைச்சர் சுட்­டிக்­காட்­டினார்.

கொழும்பில் நேற்று அமைச்சர் பீ. ஹெரி­ஸனை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­திய பின்னர்                 ஊட­கங்­க­ளிடம் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே வடக்கு முதல்வர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

முத­ல­மைச்சர் மேலும் தெரி­விக்­கையில்,

வட­மா­காண சபையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­வுத்­திட்டம் தொடர்­பான பிரே­ரணை நேற்று                        முன்­தினம் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­விடம் சமர்ப்­பித்தோம். வடக்கு முதல்வர் என்ற வகையில் நானும், மாகாண சபை எதிர்க்­கட்சித் தலைவர் எஸ். தவ­ரா­சாவும் இணைந்து இந்த பிரே­ர­ணையின் பிர­தியை சபா­நாயர் கரு ஜய­சூ­ரி­ய­விடம் சமர்ப்­பித்தோம்.

எமது மக்­களின் கருத்­துக்கள், அபிப்­பி­ரா­யங்கள் என்­ன­வென்­பது அந்த பிரே­ர­ணைியல்                            முழு­மை­யாக உள்­வாங்­கப்­பட்­டுள்­ளன.

கேள்வி : இந்தப் பிரே­ர­ணை­யி­னூ­டாக இன­வாதம் மீண்டும் தலை­தூக்­கப்­பட்­டுள்­ள­தாக குற்றம்           சாட்­டப்­பட்­டுள்­ளதே?

பதில் : அது பைத்­தி­யக்­கா­ரத்­த­ன­மான கூற்­றாகும். பல வரு­டங்­க­ளாக அர­சி­யல்­வா­திகள் சமஷ்டி என்றால் நாட்டை பிள­வு­ப­டுத்­தி­விடும் என்று தொடர்ச்­சி­யாக கூறி வரு­கின்­றனர். இதனால் நீங்கள் அவ்­வாறு நம்­பு­க­றீர்கள். அந்த கூற்று உங்­க­ளுக்கு பழக்­க­மா­கி­விட்­டது. பத்­தி­ரிகை, புத்­த­கங்­களை எடுத்து பாருங்கள் சமஷ்­டி­முறை என்றால் என்­ன­வென்­பது உங்­க­ளுக்கு புரியும்.

இந்­தி­யா­விலும் இந்த சமஷ்டி முறை நடை­மு­றையில் இருக்­கின்­றது. கன­டா­விலும், சுவிஸ்­லாந்­திலும் இந்த சமஷ்டி முறைமை நடை­மு­றை­யி­லுள்­ளது. சமஷ்டி முறை­யி­னூ­டாக ஒரு நாளும் நாடு பிரி­வ­டைந்து செல்­லாது.

கேள்வி வேறு மாகாண சபைகள் சுய­நிர்­ணய உரி­மையை கோர­வில்லை. ஏன் நீங்கள் மட்டும் அதனை கோரு­கின்­றீர்கள் ?

பதில் அனைத்து மாகா­ணங்­க­ளுக்கும் சுய­நிர்­ணய உரி­மைகள் கிடைக்கும் வகை­யி­லேயே இந்த பிரே­ர­ணையை நாங்கள் தயா­ரித்து நிறை­வேற்­றி­யுள்ளோம். தற்­போது தேவை­யானால் மத்­திய, மாகாண மக்கள் இதனை கோரினால் அவர்­களும் பெற்றுக் கொள்ளும் வகை­யி­லேயே எமது பிரே­ரணை அமைந்­துள்­ளது.

கேள்வி ஆனால் நீங்கள் தமிழ் மக்­க­ளுக்­கா­கவே ஒரு மாநி­லத்தை கோரு­கின்­றீர்­களே?

பதில் தமிழ் மக்­க­ளுக்­காக அல்ல. இங்கு என்ன நடந்­தது என்றால் 1956 ஆம் ஆண்டு இலங்கை முழு­வதும் தனி சிங்­கள சட்டம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. அதனால் தான் இந்த பிரச்­சினை உரு­வா­னது. அதற்கு தற்­போது தீர்­வு­காண வேண்டும்.

அதற்கு தீர்வுகாண வேண்டுமானால் தமிழ் பேசும் மக்கள் தமது செயற்பாடுகளை தமது மொழியில் செய்து கொள்ளும் வகையில் திட்டங்கள் அமைய வேண்டும். சிங்கள மக்கள் தமது பணியை முன்னெடுக்கும் வகையில் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கேற்றவகையில் அரசியலமைப்பும் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

Related posts

தண்ணீர் குடியுங்கள்! உடலில் ஏற்படும் மாற்றம்

wpengine

இனவாதிகளின் இலக்காக இருந்த டொக்டர் ஷாபி சஹாப்தீன்! ஏன் கைது செய்யப்பட்டார்.

wpengine

புல்மோட்டை இப்தார்! மாகாண சபை உறுப்பினர் அன்வரின் அறிக்கை சோடிக்கப்பட்டதா?

wpengine