பிரதான செய்திகள்

சமத்துவம்,சகோதரத்துவம் பொருந்திய நாளக அமையவேண்டும்! ரகுமத் மன்சூரின் வாழ்த்துச் செய்தி

(எம்.எம்.ஜபீர்)

எம்மிடையே அகமும் புறமும் தூய்மைப் படுத்தி முழுமையான பண்பாட்டு மாற்றத்தை ஏற்படுத்திச் செல்லும் இந்த புனித நோன்பின்  இப் பெருநாள் தினம் சமாதானம், சமத்துவம் சகோதரத்துவம் பொருந்திய நாளக அமையவேண்டும் என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரின் இணைப்பு செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பிரதி ஒருங்கிணைப்புச் செயலாளருமான  ரகுமத் மன்சூர் விடுத்துள்ள புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய பெருநாள் தினத்தில் முஸ்லிம்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்திருந்து, குளித்து புத்தாடையணிந்து, நறுமணம் பூசி, இன்சுவை உணவுகள் உண்டு பின்னர் பள்ளிவாசல்களிலே ஒன்று கூடி தக்பீர் முழக்கம் செய்து இறைவனைப் புகழ்ந்து நன்றி செலுத்தி மகிழ்வர். பள்ளிவாசல்களிலே தமது சகோதார்கள், உறவினர்களுடன் தோளோடு தோள் சேர்த்து நின்று பெருநாள் தொழுகை தொழுது, பின்னர் ஒருவரோடு ஒருவர் கட்டித் தழுவி தமது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்வர்கள். இந்த புனிதமான நோன்புப் பெருநாளை கொண்டடும் இலங்கை வாழ் மக்கள், வெளிநாடுகளில் தொழில் புரியும் எமது சகோதரர்களுக்கும்; குறிப்பாக அம்பாரை மாவட்ட மக்கள் அனைவருக்கு இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மன மகிழ்ச்சியடைகின்றேன்.

இன்றைய புனித தினத்தை வீணாக களியாட்டங்களில் கழிக்காமல் வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும். இஸ்லாம் மார்க்கம் எமக்கு கற்றுத்தந்த பலவற்றை வாழ்க்கையில் கடைப்பிடித்து நடப்பதுடன் சகோதர இன மக்களுக்கு முன்மாதிரியாகவும் திகழ வேண்டும். அத்துடன் இலங்கை மற்றும் உலகில் வாழும் எமது முஸ்ஸிம் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள சவால்களை முறியடித்து எந்த பிரச்சினைகளும் இன்றி ஒற்றுமையாக வாழ்வதற்கு இன்றைய திருநாளில் நாம் அனைவரும் பிரத்திப்போம் என தெரிவித்தார்.

Related posts

வெள்ளப்பெருக்கு கொடுப்பனவு மேலும் மூன்று மாதம்

wpengine

சீனா வெளிவிவகார அமைச்சரை வரவேற்ற நாமல் இலங்கையில் பல நிகழ்வு

wpengine

21 தாக்குதல் பாராளுமன்றத்தில் பேசியதற்கு ஹரினுக்கு அழைப்பாணை

wpengine