பிரதான செய்திகள்

சபைகளுக்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர்கள் எதிர்வரும் 9 ஆம் திகதி

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சபைகளுக்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர் பட்டியலை கையளிக்க அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் எதிர்வரும் 8ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் கோரிக்கைக்கு அமைய இந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர்கள் எதிர்வரும் 9 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட உள்ளன.

இதனிடையே உள்ளூராட்சி சபைகளின் பணிகள் மார்ச் இரண்டாம் வாரத்திற்கு பின்னர் ஆரம்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

இதன் பின்னர் உள்ளூராட்சி சபைகள் மார்ச் 20 ஆம் திகதி இயங்க ஆரம்பிக்கும் என அமைச்சர் பைஸர் முஸ்தபா கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார்.

Related posts

தையல் இயந்திரங்களை வழங்கி வைத்த சல்மா அமீர் ஹம்ஸா

wpengine

பயங்கரவாதத்தை அடையாளம் காண, செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் facebooK

wpengine

மன்னாரில் கடல் உணவு ஏற்றுமதி நிகழ்ச்சி

wpengine