கட்டுரைகள்பிரதான செய்திகள்

சபீக் ரஜாப்தீன் இல்லாத நிலையில் அதிஉயர்பீட கூட்டத்துக்கு சண்டியர்களை ஏற்பாடு செய்வது யார் ?  

முகம்மத் இக்பால் ,சாய்ந்தமருது  

பரபரப்பான சூழ்நிலையில் அதிஉயர்பீட கூட்டம் நடைபெறும்போது தாருஸ்ஸலாம் வாயிலில் சில சம்பவங்கள் நடைபெறுவது வழமை.

அதாவது அதிஉயர்பீட கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே சில இனம்புரியாத நபர்கள் தாருஸ்ஸலாம் முன்பாக கூட்டம் கூட்டமாக நிற்பார்கள். அவர்கள் ஆண்களாக இருந்தும், கொண்டை வளர்த்திருப்பார்கள், நாய்களின் கழுத்துகளில் தொங்குவது போன்று கழுத்தில் தடிப்பான வெள்ளிச் சங்கிலிகளும், கைகளில் கனமான காப்புகளும் அணிந்திருப்பதுடன் பார்ப்பதற்கு அருவருப்பாக இருப்பார்கள்.

அதாவது இவர்கள் பாதாளலோகத்தினர் அல்லது குடுக்காரர்கள் அல்லது காடையர்கள் அல்லது கொழும்புச் சண்டியர்கள் என்று அழைக்கப்படுவார்கள்.

கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக “தாருஸ்ஸலாம்” உள்ளே வருபவர்களும், வெளியேறிச் செல்பவர்களும் இந்த சண்டியர்களை கடந்துதான் செல்ல வேண்டும். அவ்வாறு செல்கின்றபோது மாற்றுக்கருத்துடைய அதிஉயர் உறுப்பினர்களுக்கு இனம்புரியாத ஒரு பயம் ஏற்பட்டுவிடும்.

அவ்வாறான  நிலையில் தாங்கள் எவ்வாறெல்லாம் தலைவருக்கு எதிராக கூட்டத்தில் பேசவேண்டும் என்று தயார்படுத்திச் செல்கின்றார்களோ, அவைகள் அனைத்தும் மறந்துவிடுவதுடன், பேசுவதற்கு நாக்கு ஒத்துழைக்காது வறண்டுவிடும், உமிழ்நீர் சுரக்காது, தொடைகள் நடுங்கும், கை கால்கள் உதற ஆரம்பிக்கும். குளிரூட்டிய அறைக்குள் வியர்க்கும் இந்த  நிலையில் கூட்டம் முடிவதற்கு அதிக நேரம் எடுக்காது. “தலைவரின் முடிவே இறுதி முடிவு, அல்லாஹ் அக்பர்” என்ற கோசத்துடன் கூட்டம் கலைந்துவிடும்.      

இது ஒரு உளவியல் தாக்குதல். அதாவது மாற்றுக்கருத்துடைய அதிஉயர்பீட உறுப்பினர்களுக்கு உடல்ரீதியாக தாக்குதல் நடத்தாமல் உளவியல்ரீதியாக தாக்குதல் நடாத்தும் தந்திரோபாயமாகும்.

இவ்வாறான பாதாளலோகத்தினர்களை வரவழைக்கும் ஏற்பாடுகளை வழக்கமாக கட்சியின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் அவர்களே ஏற்பாடு செய்வார். ஆனால் தற்போது அவர் முஸ்லிம் காங்கிரசைவிட்டு

விலகியுள்ள நிலையில் இந்த ஏற்பாடுகளை யார் செய்வார்களோ தெரியாது.

இதற்கு பெயர்தான் உள்ளக ஜனநாயகமும், குர்ஆண், ஹதீஸ் அடிப்படியிலான நீதி நெறிமுறைகளுமாகும்.   

Related posts

கொரோனா நோயாளியின் மனைவிக்கும் கொரோனா தொற்று

wpengine

வடக்கு,கிழக்கு அமைச்சு! கூட்டமைப்பின் கோரிக்கை ரணில் தீர்மானம்

wpengine

ஜனாதிபதி ஆணைக்குழு முசலிக்கு விஜயம்! பிரதேச செயலகத்தில் கூட்டம்

wpengine