செய்திகள்பிரதான செய்திகள்

சத்தாரதன தேரருக்கு மனநல அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு! ஆபாச மற்றும் மோசமான வார்த்தைகள் பிரயோகிக்க கூடாது என்ற நிபந்தனை பினை.

ராஜாங்கனையைச் சேர்ந்த சத்தாரதன தேரர் ஆபாசமான மற்றும் மிக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி காணொளிகளை வெளியிட்டமை தொடர்பில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு குற்றபுலனாய்வு பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோட்டை நீதவான் நேற்று (09) குற்றப் புலனாய்வுத் துறைக்கு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

ராஜங்கனையே ஹமுதுருவோ என்ற யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொளிகளில் ஆபாசமான மற்றும் மிக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் சத்தாரதன தேரருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த தேரர், ஆபாசமான மற்றும் மிக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்திமை குறித்து நீதிமன்றத்தில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் மனநல பிரிவில் முன்னிலையாகி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

சுற்றுப்பயணங்களை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம்!-சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்-

Editor

புத்தளம் மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக கூட்டம்

wpengine

மன்னார் மாவட்டத்தில் கடும் வறட்சி!

Editor