பிரதான செய்திகள்

சதோச நிலையத்தில் விலை குறைப்பு அமைச்சர் றிஷாட்

இலங்கை சதோச வர்த்தக நிலையங்களில் அரிசி மற்றும் பருப்பினை இன்று முதல் குறைந்த விலைக்கு பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் ரிஷாட் பதியூதின் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய  தினம்(01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தற்போது ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளமைமைய அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய, சம்பா அரிசி ஒருகிலோவை 78 ரூபாவுக்கும், நாட்டரிசி ஒருகிலோவை 73 ரூபாவுக்கும் பெற்றுக் கொள்ள முடிவதோடு, ஒருகிலோ பருப்பினை 148 ரூபாசுக்கு நாடுபூராகவும் உள்ள எந்தவொரு சதோச நிலையத்திலும் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அமைச்சர் ரிஷாட் பதியூதின் தெரிவித்துள்ளார்.

Related posts

புலி குடும்பங்களுக்கு வடமாகண சபையின் பணம் – திவயின செய்தி

wpengine

மட்டக்களப்பில் அவ்வாறான இணைவுக்கு SLMC தான் தடையாக இருந்தது.

wpengine

நச்சுத்தன்மையற்ற நாடு! ரத்தன தேரர் -அமைச்சர் சம்பிக்க ரணவக்க முறுகல்

wpengine