பிரதான செய்திகள்

சதொச நிறுவனத்தின் தலைவர் கைது

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவரான கே.நலின் ருவன்ஜீவ பர்னாந்து கைது செய்யப்பட்டு, ஏப்ரல் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார்.

வழக்கொன்றின் சந்தேகநபரான அவர் வௌிநாடு செல்ல முயற்சித்த போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

39 இலட்சம் ரூபா அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் கே.நலின் ருவன்ஜீவ பர்னாந்து மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுடன் இணைந்து கொள்வனவு செய்யப்பட்ட விளையாட்டு உபகரணங்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாகவும் அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கோட்டை நீதவான் முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தியபோதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Related posts

Braking மன்னாரில் கொரோனா அனைவருக்கும் (P.C.R) பரிசோதனை-

wpengine

மூன்று மாத காலத்தில் செயற்திறன் அற்ற அரசு என்பதை அது உறுதி செய்துள்ளது.

wpengine

அடுத்த வாரம் 250 ஏக்கர் காணி விடுவிப்பு! இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

wpengine