கட்டுரைகள்பிரதான செய்திகள்

சீனி விவகாரம்! ஜோன்ஸனுக்கு எதிராக பேசாத பொதுபல சேனா,சிங்கள ராவய ஏன்? றிஷாட்டிற்கு மட்டும் இனவாதம் பேசுகின்றது.

(ஏ.எச்.எம்.பூமுதீன்)

சதொசவுக்கு கொண்டுவரப்பட்ட சீனி கொள்கலனில் இருந்து கொக்கையின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு ஏழுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..
போதை பொருளின் பெறுமதி 320 கோடி ரூபா.

சம்பவம் அல்லது செய்தி இதுதான்.

மஹிந்த ஆட்சியிலும் இதே சம்பவம் – இதே சதொச ஊடாக நடந்ததாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அந்தநேரம்- அமைச்சர் ஜோன்ஸடனுக்கு எதிராக கொந்தளிக்காத சிங்கள ராவய, பொது பலசேனா இப்போது அமைச்சர் ரிஷாதுக்கு எதிராக கொந்தளிக்கிறது.

இவ்வளவு காலமும் ஒழிந்துகொண்டிருந்த ஹிருவில், அமைச்சர் றிஷாத்திடம் மண் கவ்விய ஆனந்த தேரரும் ஓடோடி வந்துவிட்டார்.

அமைச்சர் ரிஷாதுக்கு கீழ்வரும் நிறுவனமான சதொசவில் நடந்துள்ளதால் – இந்த இனவாதிகளுக்கு றிஷாத்தின் மீது அவதூறு பரப்ப அவல் கிடைத்து விட்டது.

அமைச்சர் ரிஷாத்தை அழிக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருக்கும் சிங்கள ராவய, பொது பலசேனா முந்திக்கொண்டு ரிஷாத்தை பதவி விலக்குமாறு கோரி இருப்பதில் ஆச்சரியம் இல்லாத போதும் , இவ்வாறானவர்களின் பின்னணி-சதி இருக்குமோ என்ற ஐயத்தையும் இப்போது எழுப்பியுள்ளது.

ஆனந்த தேரர், இந்த கொக்கையின் வில்பத்துவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறியுள்ளதை பார்க்கும்போதே தெளிவாகிறது ரிஷாத்தை பழி வாங்க இதனை பயன்படுத்தப்போகிறார்கள் என்பது.

மன்னார்- தாராபுரத்தில் ஒழுக்கமிக்க குடும்பத்தில் பிறந்து, இன்று முஸ்லீம் சமூகமே அங்கீகரித்துள்ள ரிஷாத் பதியுதீன் எனும் ஆளுமைமிக்க தலைமையை – சேறு பூசி அழிக்க முட்படுவதை முஸ்லிம்கள் அறியாமலில்லை.

காணி அபகரிக்கிறார் என்ற இந்த இனவாதிகள் , காடழிப்பு, யானைகளை கொள்கிறார் என்றனர். இப்போது போதைப்பொருளுடன் அவரை ஒப்பிடுகின்றனர். நாளை- அமைச்சர் ரிஷாத் ஆயுதம் கடத்துகின்றார், சிங்கம்,புலிகளை கொள்ளுகின்றார் என்றெல்லாம் பிரச்சாரம் செய்வர் என்பதையும் முஸ்லீம் சமூகம் அறியாமலில்லை.

பேரினவாத இனவாதிகள்தான் இப்படி என்றால், அதனையும் தாண்டி றிஷாத்தின் அரசியல் முஸ்லீம் பெயர்தாங்கிய எதிரிகளின் வசை பாடல் ஆனந்த தேரரையும்விட மோசமாகவுள்ளது.

அமைச்சர் ரிஷாத்- 3000 கோடிக்கு அதிபதி என்ற கிறுக்கு புத்தியுள்ள ஒருசில முகநூல் சண்டியர்கள்- இந்த 320 கோடி போதைப்பொருளுடன் அவரை ஒப்பிட முனைந்து ” நாங்கள் வதந்தி பரப்புவோர்,பொய்யர்கள்,இட்டுக்கட்டுவோர்” என்பதை தங்களை அறியாமலேயே முஸ்லிம்கள் மத்தியில் பறைசாற்றி வருவதை பார்க்கும்போது அழுகையும் சிரிப்பும் ஒன்றாக வருகின்றது.

அமைச்சர் றிஷாத்திடம் 3000 கோடி பணம் இருந்தால் எதுக்கு அவர் இந்த 320 கோடிக்கு பின்னால் போய் அவப் பெயர் தேட வேண்டும்? கொஞ்சமாவது சொந்த புத்தி இருக்கோணும்..

இல்லாட்டி, முன்னர் சொன்ன பொய்யை நினைவில் வைத்திருந்து அதட்கு வாசியாக பதிவுகளை இட வேண்டும், செய்திகளை எழுத வேண்டும்.

இஸ்லாத்தில் இருக்கவே தகுதி இல்லாத, படுகொலை செய்யப்படவேண்டிய ” முர்தத்” ஒருவர்- இன்னொருவரை பார்த்து குடிகாரன் என்றானாம் . அதுபோல்தான் இந்த முகநூல் சண்டியர்களின் பதிவுகளும் இருக்கிறது.( உதாரணம் புரிந்தவர்களுக்கு புரியும். தொப்பி கணக்கானவர்கள் போட்டுக்கொள்ளலாம்.)

புகை பிடித்துவிட்டு வந்த ஒருவரிடம் இருந்து அந்த வாசனை வந்ததேட்க்கே அவரை “இன்றுபோய் வாயை நன்றாக கழுவிவிட்டு நாளை வாருங்கள்”என்று திருப்பி அனுப்பிய அந்த ரிஷாத் பதியுதீனுடன் – கொக்கையினை ஒப்பிடுவதை அல்லாஹ்வே ஏற்க மாட்டான்.

Related posts

மன்னாரில் தமிழ் கூட்டமைப்பு வேட்புமனு தாக்கல்

wpengine

அரசியலுக்காக முஸ்லிம்களை பேரின வாதிகளிடம் அடகு வைக்கும் மு.காவின் போராளிகள்..!

wpengine

வெளிநாட்டில் வேலைசெய்வோருக்கு புதிய தொழில்நூற்பம்

wpengine