பிரதான செய்திகள்

சதொசவிற்கு நெல்களை வழங்க திட்டம்

அரிசி தட்டுப்பாட்டிற்கான தீர்வாக நெல் விநியோக சபையில் தற்போது கையிருப்பில் இருக்கின்ற நெற்களை நாடு பூராகவும் உள்ள 500 நெல் ஆலைகளுக்கு வழங்கியிருப்பதாக நெல் விநியோக சபை கூறியுள்ளது.

குறித்த நெற்களை சந்தைக்கு வழங்கும் வரையிலான நடிவடிக்கைகளின் போது அரச அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் இடம்பெறுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது என்று அந்த சபையின் தலைவர் எம். பீ. திசாநாயக்க கூறினார்.

இது தவிர இலங்கை சதொசவிற்கு 20,000 மெட்ரிக் தொன் நெல் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

எதிர்வரும் தினங்களில் மேலும் 35,000 மெட்ரிக் தொன் நெற்களை சதொசவிற்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக எம். பீ. திசாநாயக்க மேலும் கூறினார்.

Related posts

ரணில்,மஹிந்த இணக்கம் தெரிவித்தால் சம்பந்தனுக்கு பதவி

wpengine

அமைச்சுக்கான நிதியினை செலவு செய்யாத அமைச்சர்கள்

wpengine

இரண்டு பதவிகளையும் இராஜினாமா செய்தார் அசாத் சாலி

wpengine