பிரதான செய்திகள்

சண்டித்தனம் காட்டிய கூட்டமைப்பின் மன்னார் நகர சபை தவிசாளர்! முசலி அரசியல்வாதிகள் வாய்மூடி மௌனம்

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிலாவத்துறை,கொக்குப்படை வீட்டுதிட்ட காணிப்பிரச்சினை தொடர்பாக இன்று காலை கொக்குபடையான் கிராம மக்கள்  முசலி பிரதேச செயலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு தெரிவித்ததாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்தார்.

இதன் போது கொக்குபடையான் கிரிஸ்தவ மக்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்டனி மற்றும் மன்னார் பிரதேச சபையின் சில உறுப்பினர்கள் சிலாவத்துறை விட்டுதிட்ட காணிக்கு சென்று சண்டித்தனம் காட்டிவிட்டு சென்றுள்ளதாகவும்,அங்கு சென்ற சில முஸ்லிம்களை அச்சுறுத்திவுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த காணி கடந்த 2010ஆம் ஆண்டுகாலப்பகுதியில் சிலாவத்துறை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

அத்துடன் குடியிருப்புக்கான விதிகள்,மின்சார வசதிகள் கூட வழங்கப்பட்ட நிலையில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும்  நோக்குடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மன்னார் உறுப்பினர்கள் செயற்பட்டுவருகின்றார்கள்.எனவும் தெரிவிக்கின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மன்னார் நகர சபையின் தவிசாளரின் சண்டிதனத்தை கண்டித்து முசலி பிரதேசத்தில் உள்ள இரண்டு மாகாண சபை உறுப்பினர்கள்,முசலியின் தவிசாளர்,உப தவிசாளர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் இதுவரைக்கும் எந்தவித கண்டன அறிக்கையினையும் தெரிவிக்கவில்லை என அறியமுடிகின்றன.

Related posts

அமைச்சர் றிசாத் பதியுதீனுக்காக எழுதுவோர் யதார்த்தவாதிகள்

wpengine

அரசாங்க நிறுவனங்களை விற்பனை செய்ய ரணில், மைத்திரி முயற்சி

wpengine

முல்லைத்தீவு பகுதியில் முறுகல் நிலை! மக்கள் போராட்டம்

wpengine