பிரதான செய்திகள்

சட்டவிரோத மண் அகழ்வு! மக்களை பற்றி சிந்திக்காத நல்லாட்சி அரசாங்கம்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கோணாவில் காந்தி கிராமத்தில் மக்களது குடியிருப்புக் காணிகள், வயல் காணிகளில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலரால் சட்டவிரோத மண் அகழ்வு வியாபாரம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

இச்சட்டவிரோத மண் அகழ்வு குறித்து காந்தி கிராமம் மக்களும் காந்தி கிராமம் கிராம அபிவிருத்திச் சங்கத்தினரும் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையம் மற்றும் அக்கராயன் பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டபோதும் இப்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வைத் தடுத்து நிறுத்துவதற்கான எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் சட்டவிரோத மண் அகழ்பவர்கள் இவ்விடயம் பற்றி எடுத்துக் கூறி இது பிழை, சட்டவிரோதமானது என கதைப்பவர்களை தமக்கு உயர் மட்டச் செல்வாக்கு இருப்பதாகக் கூறி அச்சுறுத்தி வருவதாகவும் கவலை தெரிவிக்கப்படுகின்றது.

கோணாவில் காந்தி கிராமத்தில் RC- N.P.-4119 மற்றும் 25சிறி-4263 ஆகிய இலக்கங்களையுடைய உழவு இயந்திரங்களில் அரச உத்தியோகத்தரான பாலசிங்கம்-பவான், பிரகாஸ் என அழைக்கப்படும் இ.பிரபாகரன் ஆகியோரது குழுவினர் தொடர்ச்சியான சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டு வருவதாகக் அப்பகுதி மக்களாலும் கிராம அபிவிருத்திச் சங்கத்தாலும் கூறப்படுகின்றது.

இவ்விடயம் குறித்து காந்திகிராமம் கிராம அபிவிருத்திச் சங்கத்தினரால் அப்பகுதி கிராம சேவையாளர், கரைச்சிப் பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் கடித மூலம்முறையிடப்பட்டுள்ளது.

மேற்படி சட்டவிரோத மண் அகழ்வாளர்களிடம் அப்பகுதியில் மண் அகழவேண்டாம் என்று மக்களாலும் பொது அமைப்புக்களாலும் கூறப்பட்டபோது நாம் இப்பகுதியில் மண் அகழ்ந்து வியாபாரம் செய்வோம் அதனை ஜனாதிபதியால் கூட தடுக்கமுடியாது.

எந்தக்கொம்பனிடம் கூறினாலும் நாம் பயப்படமாட்டோம்! எம்மை எதுவும் செய்யமுடியாது! எனவும் மிரட்டி அச்சுறுதி வருவதாகக் கவலை தெரிவிக்கப்படுகின்றதுடன் இவ்விடயத்தில் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்காது பாராமுகமாக இருக்கின்றமை பொலிஸார் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.625.0.560.320.500.400.197.800.1280.160.95 (1)

கிளிநொச்சி மாவட்டத்தில் பன்னங்கண்டி, கோரமோட்டை, கோரக்கன்கட்டு, உமையாள்புரம், அக்கராயன், உருத்திரபுரம் என பல பகுதிகளிலும் சட்டவிரோத மண் அகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமையும் இவ்விடயத்தில் பொலிஸாரும் பொறுப்பு வாய்ந்தவர்களும் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றமையானது மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.625.0.560.320.500.400.197.800.1280.160.95 (3)

625.0.560.320.500.400.197.800.1280.160.95 (3)

Related posts

மன்னாரில் மக்கள் பொருட்கொள்வனவில் ஆர்வமுடன் ஈடுபட்டிருக்கவில்லை

wpengine

2ஆம் கட்ட 5000 கொடுப்பனவு 11ஆம் திகதி பசில் ராஜபஷ்ச

wpengine

மியன்மார் பழங்குடியினர் மீது இரானுவம் தாக்குதல் 19 பேர் பலி

wpengine