பிரதான செய்திகள்

சட்டவிரோத துப்பாக்கிகளை ஒப்படைப்பதற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலம் நிறைவு

சட்டவிரோத துப்பாக்கிகளை ஒப்படைப்பதற்காக வழங்கப்பட்டிருந்த பொதுமன்னிப்பு காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.

இந்த பொதுமன்னிப்பு காலத்தினுள் 404 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர குறிப்பிட்டார்.

ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி முதல் இம்மாதம் 6 ஆம் திகதிவரை பொதுமன்னிப்பு காலம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

குறிப்பாக கம்பஹா மாவட்டத்தில் 100 துப்பாக்கிகளும், கொழும்பில் 44 துப்பாக்கிகளும், மன்னாரில் 36 துப்பாக்கிகளும் புத்தளம் மாவட்டத்தில் 24 துப்பாக்கிகளும், இரத்தினபுரியில் 21 துப்பாக்கிகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறினார்.

Related posts

இளம் மனைவிக்கு கணவன் செய்த கேவலம்! 23ஆம் திகதி விளக்கறியல்

wpengine

ஜனாதிபதியின் கரங்களை நாங்கள் பலப்படுத்த வேண்டும்- ஹிஸ்புல்லாஹ்

wpengine

ஜனாதிபதி தூதுக்குழுவினருடன் கட்டார் செல்லும் அமைச்சர் றிஷாட்

wpengine