பிரதான செய்திகள்

“சங்கைமிக்க புனித ரமழானில் சங்கடங்கள் நீங்க பிரார்த்திப்போம்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

மக்களின் துயரங்கள் நீங்கி, மகிழ்ச்சியான வாழ்வு மலர வழிகோலுமென்ற நம்பிக்கையில், புனித ரமழானை வரவேற்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

“நோன்பு என்பது மகத்துவமிக்க கடமை. கண்ணியமிக்க இந்த ரமழான் மாதத்தை முழுமையாக அனுபவிக்கும் பாக்கியத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு அருள வேண்டும்.

பாவக்கறைகள் போக்கி, ஒருவனை புனிதனாக்கும் பெரும் பாக்கியம் பெற்றது இந்த ரமழான். இப்படியான ஒரு புனித மாதத்தில், இறை விசுவாசிகளாக நடந்து முஸ்லிம்கள் முன்மாதிரியாகத் திகழ வேண்டும். ஏழைகளின் பசியுணர்வு, இல்லாதோரின் இயலாமைகளை அறியும் ஒரு சமூகக் கடமையே புனித நோன்பு. பிற சமூகத்தவர்களது அபிலாஷைகளை புரிந்துகொள்ளவும் இந்த ரமழான் பயிற்சியளிக்கிறது. இவ்வாறு பயிற்சி பெற்ற எந்த முஸ்லிமும் பொறுப்பின்றி நடக்க முடியாது.

இவ்வாறிருந்தும், கடந்த ரமழானில் பல அநியாயங்களை முஸ்லிம்கள் எதிர்கொண்டனர். அரசியல் காரணங்களுக்காக கட்டவிழ்க்கப்பட்ட கட்டுகதைகளாலே நாம் பழிவாங்கப்பட்டோம். இதற்குப் பின்னாலிருந்த தீய சக்திகளை இன்று இறைவன் அம்பலப்படுத்திவிட்டான்.

அநியாயக்காரர்கள் ஆட்சியில் நிலைத்ததாக சரித்திரம் இல்லை. இந்நிலைமைகளே எமது நாட்டிலும் தென்படத் தொடங்கியுள்ளன. முஸ்லிம்களின் பொறுமைக்கு கிடைத்த சன்மானங்களை கண்ணூடாக காணும் பாக்கியத்தை அல்லாஹ் அருளியிருப்பதாகவும்” அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

சபீக் ரஜாப்தீன் இல்லாத நிலையில் அதிஉயர்பீட கூட்டத்துக்கு சண்டியர்களை ஏற்பாடு செய்வது யார் ?  

wpengine

முடியுமானால் எங்களை தோற்கடித்து காட்டுங்கள். அதற்காக மக்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்குவோம்.

Maash

களுத்துறையில் இடம்பெற்ற மீலாத் விழா

wpengine