பிரதான செய்திகள்

சக்தி தொலைக்காட்சியின் செய்தியினை கண்டிக்கும்! வட்டமடு விவசாய அமைப்பு

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, நேற்றைக்கு முந்திய தினம் (24.07.2017) ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றவுப் ஹக்கீம் தலைமையில் கொழும்பிலிருந்து அழைத்துவரப்பட்ட உயர் அதிகாரிகள் குழுவினர் வட்டமடு விவசாயக் காணிப் பிரதேசத்தை பார்வையிட்டனர்.

அதன் பின்னர் நேற்று (25.07.2017) அம்பாரை அரசாங்க அதிபர் காரியாலயத்தில் அரசாங்க அதிபர் தலைமையில், மேற்படி உயர்மட்டக் குழு முன்னிலையில் விவசாயிகளையும் பாற்பண்ணையாளர்களையும் அழைத்து இறுதித் தீர்வினைப் பெறும் பொருட்டு ஒரு பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இப்பேச்சுவார்த்தையில் மாகாண சபை உறுப்பினர் தவம் அவர்கள் தலைவர் றஊப் ஹக்கீம் அவர்களின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார்.
அச்சமயம் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சக்தி ரீவி (news first) ஊடகவியளாளர் தனது வீடியோ கமராவுடன் உள்ளே நுழைந்தார்.

உடனே வட்டமடு விவசாயி ஒருவர் எழுந்து, பேச்சுவார்த்தை முடியும் வரை ஊடகங்களை அனுமதிக்க வேண்டாம் எனவும், நமது இணக்கப்பாடு முடிந்த பிறகு நாமாக ஊடகங்களுக்கு நடந்த விடயங்களைச் சொல்லுவோம் என்றும் கூறினார்.

அக்கோரிக்கையை ஏற்ற அரசாங்க அதிபர் குறித்த ஊடகவியலாளரை வெளியே சென்று அமருமாறு பணித்தார். பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் தான் முழு விபரமும் கூறுவதாகக் கூறினார். அவ் ஊடகவியலாளர் “செய்து காட்டுகிறேன் வேலை பாருங்கள்” என்று கூறிய வண்ணம் கோபத்துடன் வெளியேறினார்.

இவ்வாறு அவரை வெளியேறச் சொன்னதற்கு காரணம் இருக்கிறது. இதற்கு முன்னர் நடந்த பேச்சுவார்த்தை ஒன்றின் பின்னர், சிங்களம் சரியாகத் தெரியாத விவசாயி ஒருவர் 600 ஏக்கர்
என்பதற்குப் பதிலாக 800 ஏக்கர் என்று தவறுதலாகக் கூறிய ஒரு வார்த்தையை ஊடகத்தில் பூதாகரமாக மாற்றி, தீர்வு எட்டப்படுவதை அநியாயமாகத் தடுத்தார். அதனால்தான் விவசாயிகள் அவரைத் தவிர்த்துக் கொள்ள நினைத்தனர்.

இந்தக் கோபத்தில், அவர் வேறு இடங்களில் உழவு இயந்திரம் உழுதுவதையும் மாடு இறந்து கிடப்பதையும் காட்டி, வன பரிபாலன திணைக்கள உயர் அதிகாரிகள் இவை விவசாயக் காணிகள்தான் என்று ஏற்றுக்கொண்டதை மறைத்து, இவை விவசாயக் காணிகளில்லை என்று நிராகரித்ததாகக் கூறி பொய்யான செய்தியை news first ஊடாக ஒளிபரப்பி இருக்கிறார்.
அமைச்சர் றஊப் ஹக்கீம் அவர்களுடைய விடா முயற்சியை நாம் என்றும் நன்றி மனங்கொள்கிறோம். ஜனாதிபதி மட்டத்தில் பேசி இவ்வுயர் மட்டக்குழுவை அழைத்து வரும் ஏற்பாடுகளைச் செய்த அமைச்சர் றஊப் ஹக்கீம் அவர்களை அவமானப்படுத்தும் வகையிலான வார்த்தைப் பிரயோகங்களையும் இவ்வூடகவியலாளர் பயன்படுத்தியுள்ளார்.

இது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். இந்த ஊடகவியளாளரின் பொய்யான செய்திகளை எவ்வித மீள்பரிசீலனையும் மேற்கொள்ளாமல் ஒலிபரப்புச் செய்த மகாராஜா நிறுவனத்தினரிடம் வட்டமடு விவசாயிகள் தமது கவலையையும், அவ்வூடகவியலாளரின் ஊடக தர்ம மீறலுக்கு எதிரான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றனர் எனக் கூறினார் வட்டமடு விவசாய சங்கச் செயலாளர் அக்கரைப்பற்று எஸ். எம். ஜுனைடீன் அவர்கள்.

Related posts

வவுனியா தெற்கு வலயத்தில் அல்- இக்பால் மகா வித்தியாலயம் முதலிடம்

wpengine

இந்தியாவில் இருந்து தலைமன்னாருக்கு வருகைதந்த குடும்பம்

wpengine

முசலி மீனவர்கள் பிரச்சினை! அமைச்சர் மகிந்ந அமரவீரவிடம் சுட்டிக்காட்டிய அமைச்சர் றிஷாட்

wpengine