பிரதான செய்திகள்

கோவில் அபிவிருத்திக்காக மாகாண உறுப்பினர் சிவநேசன் நிதி உதவி

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் வட மாகாண சபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் மாகாண அபிவிருத்திக்கான தனது நிதியில் இருந்து ரூபா 50,000/- துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அம்பலப்பெருமாள் கிராம பிள்ளையார் கோவிலின் அபிவிருத்திக்காக வழங்கியுள்ளார்.

கடந்த 10.11.016 அன்று துணுக்காய் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு. இ.பிரதாபன் முன்னிலையில் ஆலய நிர்வாக சபைத் தலைவர் திரு. மதியழகனிடம் அதற்கான காசோலை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் உதவித்திட்டப் பணிப்பாளர் திரு. நந்தசீலன், கிராம உத்தியோகத்தர் திரு. நாகபாதம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை 100 ரூபாயினால் குறைகிறது!

Editor

வவுனியா மாநகரசபையின் புதிய ஆணையாளர் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.

Maash

அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணியிடம் இலஞ்சம் கோரிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவருக்கு விளக்கமறியல்..!

Maash