பிரதான செய்திகள்

கோறளைப்பற்று பகுதியில் திருட்டு சம்பவம் மடக்கி பிடித்த வாழைச்சேனை பொலிஸ்

(அனா)
கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் புதுக்குடியிருப்பு பகுதியில் வீடொன்றினுள் புகுந்து திருடி விட்டு ஓட முயன்ற போது பொதுமக்களால் இரண்டு திருடர்கள் மடக்கி பிடித்து வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் கடந்த (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம் பெற்றது.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் புதுக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த திருமதி.சி.பரமேஸ்வரி என்பவரின் வீட்டில் திருடிய திருடர்களே பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரி;டம் ஒப்படைத்துள்ளனர்.

வீட்டு உரிமையாளர் தொழில் நிமிர்த்தம் வெளியில் சென்று வீடு திரும்பி வந்த போது திருடர்கள் வீட்டில் திருடப்பட்ட பொருட்களை விட்டு விட்டு ஓடியுள்ளனர்.

இதனை பார்வையுற்ற வீட்டு உரிமையாளர் கூச்சலிட்ட போது பொதுமக்கள் அவ்விடத்திற்கு விரைந்து வருகை தந்து இரண்டு திருடர்கள் வீட்டு மதில்கள் மேலால் பாய்ந்து தப்பிக்க முயற்சித்த போது பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸாருக்கு பொதுமக்கள் தெரியப்படுத்தியதையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தலைமையில் வருகைதந்த பொலிஸ் குழுவினர் இரண்டு திருடர்களையும் கைது செய்துள்ளனர்.

திருடர்களால் வீட்டில் இருந்து தொலைக்காட்சி பெட்டி, டெக், அன்டனா பொருட்கள் மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணம் என்பவற்றை திருடியிருந்தனர் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் பணம் கைப்பற்றப்படவில்லை.

சந்தேக நபர்கள் வாழைச்சேனை மற்றும் பிறைந்துரைச்சேனை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்பு பட்டவர்கள் என்றும் வாழைச்சேன பொலிஸார் தெரிவித்ததுடன் இது தொடர்பான மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.unnamed-7

Related posts

மு.கா மாகாண சபை உறுப்பினர் முஹம்மட் நியாஸ் முகநூலில் இருந்து

wpengine

இராணுவ சோதனைச்சாவடிகள் வட மாகாண மக்கள் பல்வேறு அசௌகரியங்கள்

wpengine

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முதல்வருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

wpengine