பிரதான செய்திகள்

கோத்தாவுக்கு பெறும்பான்மை கிடைக்காவிட்டால்! நாட்டில் என்ன நடக்கும்?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நாடாளுமன்றத்தின் பலம் கிடைக்காது போனால், நாட்டில் பல நெருக்கடிகள் ஏற்படலாம் என ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் வேட்பாளரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.


மேலும் தெரிவிக்கையில்,


ஆறு மாதங்களுக்கு முன்னர் நாட்டு மக்கள் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்தனர். கோட்டாபய ராஜபக்சவை பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்தில் மக்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்தனர்.


நாடாளுமன்றத்தின் பலம் தற்போதைய ஜனாதிபதிக்கு கிடைக்காது வேறு தரப்புக்கு சென்றால் நாட்டில் என்ன நடக்கும்?. நாடு பெரிய நெருக்கடியை நோக்கி செல்லும். இதில் சிறந்த அனுபவம் எனக்குள்ளது.


நாடாளுமன்றத்தில் பலமின்றியே சுமார் 5 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்த அரச தலைவர் என்ற வகையில் எனக்கு அனுபவம் இருக்கின்றது.
எனது அரசாங்கத்தின் பிரதமர் மற்றும் அமைச்சரவையில் எனக்கு பெரும்பான்மை இருக்கவில்லை.
இந்த நிலைமையான நாடு பின்நோக்கி சென்ற பல சம்பவங்கள் நடக்க காரணமாக அமைந்தது. மோதல்கள் ஏற்பட்டன.


நாட்டில் தற்போதுள்ள மக்களுக்கும் நாளை பிறக்க போகும் குழந்தைகளுக்காகவும் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்.
அரசாங்கம் யாருடையது என்பது இங்கு பிரச்சினையல்ல. எந்த நிறம் என்பதும் பிரச்சினையல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சாய்ந்தமருது உள்ளூராட்சி விடயம் அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் உறுதி மொழி வழங்கியுள்ளேன்; நிச்சயம் நிறைவேற்றுவேன்!

wpengine

இலங்கையில் 05 இஸ்லாமிய அமைப்புக்கள் மீதான தடை நீக்கம்!

Editor

ஜம்மியாயதுல் உலமா தனது ஊடக அறிக்கையில் ஞானசார தேரரின் வழக்கு விடுவிப்பு பற்றி கூறுகிறதா?

wpengine