பிரதான செய்திகள்

கோத்தா,ரணில் அதிகாலை இரகசிய சந்திப்பு! ரணில் கோரிக்கை

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை சந்தித்து பேசியுள்ளனர்.

இதன்போது நாட்டில் தற்போது மோசமாகியுள்ள கொவிட் நெருக்கடியை சமாளிக்க ஒருங்கிணைந்த படையணியொன்று அவசியம் என ரணில் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற சந்திப்பின் போது, கொவிட் நெருக்கடியை சமாளிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு முன்வைத்த யோசனையை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளார்.

வைத்தியசாலைகளில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் மருந்து தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் கொவிட் மரணங்கள் வெகுவாக அதிகரிக்கும் என்றும் இதனைத் தடுத்து நிறுத்த உடனடியாக செயற்பட வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள், சபாநாயகர், பிரதமர், சுகாதார அதிகாரிகள் ஆகியோரை இணைத்து ஒருங்கிணைந்த படையணியொன்றை உருவாக்கி, இதுகுறித்து தீவிரமாக செயற்பட வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியிடம் யோசனை முன்வைத்துள்ளார்.

இதற்கு ஜனாதிபதி சாதகமான சமிக்ஞைகள் வழங்கியதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு குறுக்கே நிற்பதாக இல்லை அமைச்சர் ஹக்கீம்

wpengine

முஸ்லிம் விவகார அமைச்சு வேறு மதத்தவருக்கு வழங்கப்பட வேண்டும்

wpengine

ஜவாத் தொடர்பில் மு.கா. கட்சியின் புதிய அறிக்கை

wpengine