பிரதான செய்திகள்

கோத்தா,சஜித் தேர்தல் விஞ்ஞாபனங்கள் விரைவில்! தமிழ்,முஸ்லிம் மக்களின் நிலை

ஐக்கியதேசிய கட்சியினதும் பொதுஜனபெரமுனவினதும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் ஒக்டோர்பர் நடுப்பகுதியில் வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிக்கும் பொறுப்பு இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரட்ணவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன.

தேர்தல் விஞ்ஞாபனம் தற்போது நகல் வடிவில் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கியதேசிய கட்சியினதும் பங்காளிக்கட்சிகளினதும் தலைவர்கள் அங்கீகரித்த பின்னர் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியாகவுள்ளது.

பாதுகாப்பு கல்வி சுகாதாரம் உட்பட பல துறைகளை சேர்ந்தவர்கள் சம்மேளனங்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக எரான் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச பல அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொதுஜனபெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் ஒக்டோர்பர் நடுப்பகுதியில் வெளியாகும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜிஎல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Related posts

எப்பாவல பொஸ்பேட் தொழிற்சாலையில் தீ

wpengine

191புள்ளிகளை பெற்று மன்னார் சவேரியார் மாணவன் சாதனை

wpengine

வட மாகாண அமைச்சை ஒழுங்குபடுத்தி தருமாறு டெனீஸ்வரன் கடிதம்

wpengine