செய்திகள்பிரதான செய்திகள்

கோட்டைக்கல்லாறு மீனவர் தங்குமடத்தையும், எரிபொருள் நிலையைத்தையும் புனரமைத்து தருமாறு வேண்டுகோள்.

கோட்டைக்கல்லாறு கடற்கரையில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் மீனவர் தங்குமடத்தையும், எரிபொருள் நிலையைத்தையும் உடன் புனரமைத்து தமது பாவனைக்குத் தருமாறு மீனர்வர்கள் அரசாங்கத்திடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்

கடந்த 2012 ஆம் ஆண்டு மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு கடற்கரையில் அமைக்கப்பட்ட மீனவர் மீனவர் தங்குவதற்குரிய கட்டமும், எரிபொருள் நிரப்பு நிலையமும் இற்றைவரையில் கவனிப்பாரற்று தூர்ந்துபோய்க அங்கிருந்த பொருட்களும், உதிரிப்பாகங்கள் காணாமல்போன நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியில் இந்த அபிவிருத்தித்திட்டம் அப்போது முன்னெடுக்கப்பட்டிருந்தது. எனவே மக்களின் சொத்துக்கள் இனிமெலும் கள்வர்களால் சூறையாடப்படுவதற்கு விடாமல் அங்குள்ள மீனர் தங்குடத்தையும், எரிபொருள் நிரப்பு நிலையத்தையும் புனருத்தாருணம் செய்து பயன்பாட்டுக்கு விடவேண்டும் என அங்குள்ள மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது எமது மீனவகள் தங்குமடமும், எரிபொருள் நிரப்பு நிலையமும் அழிவடைந்த நிலையில், தூர்ந்துபோய், துருப்பிடித்த நிலையில் காணப்படுகின்றன. இனிமேலும் இதனை இவ்வாறு விட்டுவிடாமல் துறைசாந்த திணைக்களத்தினரும், அரசாங்கமும் இதனைப் நிவர்த்தி செய்து தூர்ந்துபோயுள்ள எமது மீனர் தங்குமடத்தையும், அமைக்கப்பட்ட தினத்திலிருந்து இற்றைவரையில் இயங்காமருள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தையும் உடன் புனரமைப்புச் செய்து தரவேண்டும்.

இவை புனரமைப்புச் செய்யப்படும் பட்சத்தில் எமக்கு மாத்திரமின்றி இப்பகுதியிலுள்ள சுமார் 5000 மீனவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் இந்த அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளப்பட்டு தற்போது 13 வருடங்கள் கழிந்த நிலையிலும், அங்கு பொருத்தப்பட்டுள்ள எரிபொருள்நிரப்பு நிலையத்தின் உதிரிப்பாகங்கள் களவாடப்பட்டும், ஏனையவை துருப்பிடித்த நிலையிலும், காணப்படுகின்ற.

இந்நிலையில் நாட்டில் புதிய அரசாங்கமும், ஜனாதிபதி அவர்களும் மக்களின் நல்ல செயற்பாடுகளுக்காகவே உருவாகியுள்ளார்கள் எனவே எமது கோரிக்கையையும் அவர்கள் நிறைவேற்றித் தரவேண்டும் என தாம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் காமினி ஜெயவிக்ரம

wpengine

முஸ்லிம் ஆசிரியைககள் ஹபாயா அணிந்து வருவதெற்கெதிரான இந்துக்கள் ஆர்ப்பாட்டம்.

wpengine

எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தல் 8ஆம் 9ஆம் திகதி

wpengine