அரசியல்

கோட்டாபய ராஜபக்சவை ரணில் காப்பாற்றினாரா ? இடைநடுவில் வெளியேறப்போவதாக மிரட்டல் .

அல்ஜசீராவிற்கு வழங்கிய பேட்டியொன்றின் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பாதுகாத்ததாக தெரிவிக்கப்படுவதை மறுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேட்டியின் இடைநடுவில் வெளியேறப்போவதாக எச்சரித்தார்.

அல்ஜசீராவின் இன்று ஒளிபரப்பாகவுள்ள ஹெட் டு ஹெட் பேட்டியில் கோத்தாபய ராஜபக்சவை தான் பாதுகாத்தார் என்ற குற்றச்சாட்டை ரணில்விக்கிரமசிங்க மறுத்துள்ளார்.

பெரும் உயிரிழப்புகளை  ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து தனது அரசாங்கம் நம்பகதன்மை மிக்க  விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளையும் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.

பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து நாட்டிலிருந்து தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு பாதுகாப்பு அளித்தீர்களா என்ற கேள்விக்கு எனது நாட்டில் அரசியல்தொடர்பற்றவரான சட்டமாஅதிபரே வழக்குதாக்கல் செய்வது குறித்து தீர்மானிப்பார் எங்களால் அவருக்கு ஆதாரங்களை அனுப்பமுடியும் என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

24 மணி நேரத்தில் 162 தேர்தல் முறைப்பாடுகள்..!

Maash

குவைத் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு.!

Maash

அரகலய காலத்தில் அரசியல்வாதிகள் அவர்களுடைய வீடுகளுக்கு அவர்களே தீ வைத்தார்களா..?

Maash