பிரதான செய்திகள்

கோட்டாபய ராஜபக்ச அரசுக்கு எதிராக கண்டியில் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது ஆர்ப்பாட்டம் கண்டியில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டிற்குப் பின்னர் இந்த புதிய அரசாங்கம் மீது மக்களே கொதித்தெழுவார்கள் என்று இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.


அதிகரித்து வருகின்ற வாழ்க்கைச் செலவு, அரச ஊழியர்களின் திடீர் இடைநிறுத்தம் உள்ளிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சியினரால் கண்டி நகரில் இன்றைய தினம் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் கிரியெல்ல தலைமைதாங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.


மரக்கறி விலைகளின் அதிகரிப்பிற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பலரும் தங்களுடைய கைகளில் மரக்கறிகளை ஏந்தி எதிர்ப்பை காண்பித்தனர்.


கண்டி நகரில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தினிடையே ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல,
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டிற்குப் பின் புதிய அரசாங்கத்திற்கு எதிராக மக்களே கொதித்தெழுவார்கள் என்று கூறினார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“நவம்பரில் இந்த புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் பல நெருக்கடிகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன. அரச ஊழியர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

ஓய்வூதியங்கள் பறிக்கப்பட்டுள்ளன.
பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் பறிக்கப்பட்டுள்ளன. காப்புறுதிகளும் இல்லை. நல்லாட்சி அரசின் 100 நாட்களிற்குள் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வைக் கொடுத்தோம். வாழ்க்கைச் செலவைக் குறைத்தோம்.


எரிபொருள் விலையை குறைத்தோம். ஆனால் இன்று சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறைந்திருக்கின்ற போதிலும் அதன் நன்மை மக்களுக்கு வழங்கப்படவில்லை.
இன்னும் இந்த அரசாங்கம் தேன்நிலவையே கொண்டாடி வருகின்றது. மக்களை மறந்துவிட்டது. எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டிற்குப் பின் இந்த அரசாங்கம் மீது மக்கள் அதிருப்தியை கொள்வார்கள்.


கடந்த வாரம் இந்தியா சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ச, கடன் செலுத்த முடியாதென கூறியுள்ளார்.


வரலாற்றின் முதல்முறை எமது நாட்டு தலைவர் இவ்வாறு வெளிநாட்டில் சென்று கூறியுள்ளார். எமது நாட்டுத் தலைவர்களில் எவரும் இவ்வாறு இதற்கு முன் கூறியிருக்கவில்லை.
எமது நாட்டு நற்பெயர் இன்று சர்வதேசத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுஜன முன்னணிக்கு வாக்களித்த மக்கள் இன்று காணாமல் போயுள்ளனர்” என கூறியுள்ளார்.

Related posts

பௌத்த பிக்கு சில்மிசம்!

wpengine

31 Counties Diplomat visited Polannurava Remote areas

wpengine

தமிழ் தேசிய கூட்டமைப்பு வீழ்ச்சி அடைந்து செல்வதற்கு காரணம் பொய் தான்! தமிழ் முஸ்லிம்கள் ஒன்றாக வாழ வேண்டும்

wpengine