பிரதான செய்திகள்

கோட்டா காலத்தில் இடைநிறுத்தப்பட்ட இலகுரக ரயில் திட்டத்தை ஆரம்பிக்க விசேட நிபுணர்களின் அறிக்கை கோரல்!

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் இடைநிறுத்தப்பட்ட இலகுரக ரயில் செயற்றிட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த விசேட நிபுணர்களின் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த செயற்றிட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான யோசனை நிதியமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அமைச்சின் தேசிய செயற்பாட்டு மையத்தினால் இந்த விடயம் தொடர்பாக அறிக்கை கோரப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கிடைத்த பின்னர் செயற்றிட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கான அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ் சத்யானந்த தெரிவித்துள்ளார்.

Related posts

பட்டதாரிகளை ஆசிரிய சேவையில் இணைத்துக்கொள்வதற்கான போட்டி பரீட்சை விரைவில்!

Editor

சமகால அரசியல் தொடர்பில் யாழ் கூட்டம்

wpengine

ஜப்பார் அலிக்கு முன்னால் அமைச்சர் நஸீர் அனுதாபம்

wpengine