பிரதான செய்திகள்

கொஸ்கம சாலாவ சம்பவம் மஹிந்த, கோத்தா பொறுப்பு சொல்ல வேண்டும் -அகில

கொஸ்கம சாலாவ இராணுவ ஆயுத களஞ்சியசாலை வெடிப்புச் சம்பவத்திற்கு முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னால் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ ஆகியோர் பொறுப்பேற்க வேண்டுமென கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சச்திப்பொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஆயுதங்களை களஞ்சியப்படுத்தும் போது பாதுகாப்பான இடங்களில் களஞ்சியப்படுத்த முன்னாள் அரசு தவறியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அதுமாத்திரமின்றி சர்வதேச தரத்திற்கு அமைய யுத்தம் நிறைவடைந்த பின்னர் ஆயுதங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் கடந்த அரசாங்கம் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால் ஆயுதங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெறவில்லை.

இவ்வாறு ஆயுதங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை அலட்சியமாக கைவிட்டதற்காக முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னால் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ ஆகியோர் பொறுப்புக் கூறுதல் அவசியமாகும் என அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

ஆட்சியாளர்களின் ஊழல்களை தடுக்க மக்கள் வீதிக்கு இறங்க வேண்டும்

wpengine

வவுனியாவில் இளைஞர் குழு வீடு புகுந்து தாக்குதல்!

Editor

அரச பணியாளர்களுக்கு வேதன உயர்வை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானம்.

wpengine