பிரதான செய்திகள்

கொவிட் தடுப்பூசி வழங்கும் முறை தொடர்பில் தௌிவு படுத்தவில்லை சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

கொவிட் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் முறை தொடர்பில் தௌிவு படுத்தவில்லை எனின் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

தங்களது கோரிக்கைக்கு உரிய தீர்மானம் வழங்கப்படவில்லை என்றால் நாளை (25) காலை 7.30 மணி முதல் கொவிட் தடுப்பு பணியில் இருந்து விலகிக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சினால் அரச வைத்திய அதிகாரிகள் சங்க உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை இன்று ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட் தடுப்பூசி பணியில் உள்ளவர்களை விட்டு விட்டு அரச வைத்திய அதிகாரிகள் சங்க உறுப்பினர்களின் குடும்பத்தினரை பாதுகாக்க சுகாதார அமைச்ச எடுத்துள்ள தீர்மானத்திற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

பேஸ்புக்கில் ஏமாறும் பெண்கள்

wpengine

தாஜூடீன் கொலையுடன் தொடர்புடைய வாகனம் கலர்மாறியது ஏன்?

wpengine

நெஞ்சை நிமிர்த்தி நின்று முகம் கொடுத்து வரும் மு.கா. தலைவர் ஹக்கீம்!

wpengine