பிரதான செய்திகள்

கொவிட் 19 சில குழுக்கள் மோசடியில் வணிகர்கள் மீது உடனடியாக நடவடிக்கை

கொவிட் – 19 தொற்றை காரணம் காட்டி வணிக நடவடிக்கைகளின் போது சில குழுக்கள் மோசடியில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.


அநுராதபுரத்தில் உள்ள அபயகிரி விகாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.


இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,


அத்தியாவசிய மற்றும் பிற நுகர்வோர் பொருட்களின் விலைகள் இப்போது நாடு முழுவதும் கடுமையாக உயர்ந்துள்ளன.


தொற்றுநோயை சாதகமாக கருதி வணிகத்துறையில் பலர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.


மோசடியில் ஈடுபட்ட வணிகர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Related posts

ரூபா வீழ்ச்சி! கடும் பொருளாதார நெருக்கடி

wpengine

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் அடிப்படை உரிமை மீறல் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தின் பரிந்துரை!

Editor

விசேட இராப்போசன விருந்து! சம்பந்தன்,விக்னேஸ்வரன் பங்கேற்பு முஸ்லிம் தலைவர்கள் எங்கே?

wpengine