அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

கொழும்பை தொடர்ந்து இரத்தினபுரி, தம்புள்ளை மற்றும் கல்பிட்டி சபைகளின் அதிகாரங்களை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி.

தேசிய மக்கள் சக்தி இன்று (16) கொழும்பை தொடர்ந்து மற்றுமொரு மாநகர சபை மற்றும் இரண்டு பிரதேச சபைகளின் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.

அதன்படி, இரத்தினபுரி மாநகர சபையின் அதிகாரத்தையே இவ்வாறு தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

இரத்தினபுரி மாநகர சபையின் மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான இரகசிய வாக்கெடுப்பில், தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் கே.ஏ.டி.ஆர்.ஐ. கட்டுகம்பல 14 வாக்குகளைப் பெற்று மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எதிர்க்கட்சி மேயர் வேட்பாளர் 12 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

அதேபோல், தம்புள்ளை மற்றும் கல்பிட்டி பிரதேச சபைகளின் அதிகாரமும் தேசிய மக்கள் சக்தி வசமானது.

தம்புள்ளை பிரதேச சபையின் தலைவராக தேசிய மக்கள் கட்சியின் டபிள்யூ.எம். திலகரத்ன இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்று நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அவர் 15 வாக்குகளைப் பெற்றார்.

எதிர்க்கட்சியில் இருந்து இரண்டு வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர், அதில் பொதுஜன ஐக்கிய முன்னணி வேட்பாளர் 6 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் 5 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.

கல்பிட்டி பிரதேச சபையின் தலைவராக தேசிய மக்கள் சக்தியின் அப்துல் சத்தார் முகமது ரிக்காஸ் இன்று நியமிக்கப்பட்டார்.

இன்று காலை நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில், தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் 16 வாக்குகளைப் பெற்றதோடு, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட மொஹமட் ஆசிக் 15 வாக்குகளை மட்டுமே பெற்றுக்கொண்டார்.

Related posts

விக்னேஸ்வரனின் “எழுக தமிழ்“ நல்லிணக்கத்திற்கு எதிரான-எம். ஏ.சுமந்திரன்

wpengine

ஹிஸ்புல்லாஹ்வின் பொய்யினை விசாரணை செய்யுங்கள்! ஷிப்லி கடிதம்

wpengine

ஹிருனிக்காவுக்கு பயந்து! ஜனாதிபதியின் சோதிடருக்கு விஷேட பாதுகாப்பு

wpengine