பிரதான செய்திகள்

கொழும்புத்துதுறையின் அபிவிருத்தி தொடர்பில் தமிழ்த் தேசியப் பேரவை ஆராய்வு

கொழும்புத்துறைப் பகுதிக்கு நேற்று (01.01.2018) திங்கட்கிழமை  விஜயம் மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசியப் பேரவையினர் துறைமுகப் பகுதியில் மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு அங்கு மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும் கள ஆய்வில் ஈடுபட்டனர்.

அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியப் பேரவை போட்டியிடுகின்றது. “தூய கரங்கள் – தூய நகரம் எனும் கோஷசத்தை முன்னெடுத்து தனது தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டுவரும் தமிழ்த் தேசியப் பேரவையினர் கொழும்புத்துறைத் துறைமுகப் பகுதியைத் தூய்மைப்படுத்துதல் மற்றும் மீனவர்களுக்கான இறங்குதுறையின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

பின்னராக வேட்பாளர்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பேரவையின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான ஆலோசனைக் குழுவினருடன் இணைந்து எதிர்காலத்தில் அப்பிரதேசத்தில் மேற்கொள்ளவேண்டிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் கள ஆய்விலும் ஈடுபட்டனர்.

Related posts

பிரம்பால் அடித்த 9வயது சிறுமி மரணம்

wpengine

முல்லைத்தீவு வைத்தியசாலையினால் பாதிக்கப்படும் மக்கள்! பலர் விசனம்

wpengine

இலங்கை அணியினை நோக்கி இங்கிலாந்து அணிக்கு 255

wpengine