பிரதான செய்திகள்

கொழும்பு, வில்பத்து, காத்தான்குடி பகுதி ஊடாக ISIS பயங்கரவாதிகள் -பொதுபல சேன

வெளிநாடுகளிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத முகவர்கள் கொழும்பு, வில்பத்து, காத்தான்குடி போன்ற பிரதேசங்களக்கு ஊடுருவியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது என தெரிவிக்கும் பொதுபல சேன, அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. 

இது தொடர்பாக பொதுபல சேனாவின் நிர்வாகப் பணிப்பாளர் கலாநிதி டிலந்த வித்தானகே மேலும் குறிப்பிடுகையில்,

சிரியாவில் உயிரிழந்த இலங்கையின் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிக்கு இவ் இயக்கம் நஷ்டஈடு வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

அத்துடன் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மாலைத்தீவு, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ்.பயங்கரவாத முகவர்கள் இலங்கைக்குள் ஊடுருவியிருப்பதாகவும் இவர்கள் கொழும்பு, வில்பத்து, காத்தான்குடி  போன்ற பிரதேசங்களில் தங்கியிருப்பதாகவும் இவர்களுக்கு அடையாள அட்டை பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் அறியவருகிறதெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

புத்தளம் மாவட்ட கிராமங்களில் அ. இ. ம. காங்கிரஸ் கட்சி கிளைகள்

wpengine

கண்டி மாநகர எல்லையில் பாதயாத்திரை செல்ல முடியாது- நீதி மன்றம்

wpengine

5 உள்ளுராட்சி மன்ற தவிசாளர்களுக்கு வாகனம் வழங்க உத்தரவு

wpengine