பிரதான செய்திகள்

கொழும்பு மேயர் வேட்பாளர் முன்னால் அமைச்சர் ரோசி

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் மேயர் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ரோஸி சேனாநாயக போட்டியிடவுள்ளார். என அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

ரோஸி சேனாநாயக தற்போது பிரதமர் ரணில் விக்கரமசிங்கவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் பிரதானியாக செயற்பட்டு வருகின்றார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதன் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் 100 நாள் அரசாங்கம் அமைக்கப்பட்டது. இந்த 100 நாள் அரசாங்கத்தில் சிறுவர் மற்றும் மகளிர் விவகாரம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக ரோஸி சேனாநாயக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் பிரதமரின உத்தியோகபூர்வ அலுவல்கள் தொடர்பான உயர் பிரதானியாக பதவி வகித்துவரும் இவர் அடுத்த வருடம் நடைபெறவுள்ள கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் மேயர் வேட்பாளராக  போட்டியிடவுள்ளார்.

Related posts

ஞானசார தேரருக்கும் அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையில் இடம்பெற்ற வாதம் (வீடியோ)

wpengine

மன்னார் டிப்போக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட மாவட்டச் செயலாளர் !

Editor

இனவாத செயலை கண்டித்து இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்

wpengine