பிரதான செய்திகள்

கொழும்பு – சிலாபம் பஸ் விபத்தில் 10 பேர் காயம்!

கொழும்பு – சிலாபம் வீதியில் வென்னப்புவ நைனாமடம் கிங்கோயா பாலத்துக்கு அருகில் இன்று (20) அதிகாலை 3.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று புல்மோட்டையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே விபத்துக்குள்ளானது.

குறித்த பஸ் பாலத்தின் பக்கவாட்டு வேலியில் மோதியதில் விபத்து ஏற்பட்டது, இதனையடுத்து சீமெந்து கலவை ஏற்றிச் சென்ற லொறியும் குறித்த பஸ் மீது பின்புறத்தில் மோதியுள்ளது.

சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ரணிலை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டம்!

Editor

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு , – வெளியான மகிழ்ச்சி தகவல்!

Maash

மன்னாரில் உங்களுக்கு வீடு நாட்டிற்கு எதிர் காலம்’ திட்டம்

wpengine